Release Date : 21 நவம்பர் 2௦25
திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் சிறப்பு சொற்பொழிவு .
20 11 2025 மாலை 6 மணிதிருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் சார்பில் எழுத்தாளர், கல்லூரி மாணவர், பள்ளி மாணவி உள்ளிட்டோருக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அரங்கில் நடைபெற்றது.திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் தமிழ் செம்மல் கோவிந்தசாமி தலைமை வகித்தார். செயலர் ஜெயலட்சுமி துவக்க உரையாற்றினார். எழுத்தாளர் ஜனனி அந்தோணி ராஜ் மலர்ந்தும் மலராத மனசு தலைப்பிலும், திருச்சி கல்லூரிமாணவர் சந்துரு சிலம்பின் நீதி தலைப்பிலும், லால்குடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி நேகா ஸ்ரீ முத்தமிழ் காவலர் தலைப்பிலும் பேசினார்கள். சிறப்பு சொற்பொழிவாற்றியவர்களுக்கு திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் சார்பில் பாராட்டு சான்றிதழ் நினைவு பரிசாக நூல்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. ----திருமதி.பிலோமின் ஸ்டெல்லா திருச்சி
www.anandabhaskar.com