Release Date : ௦5 டிசம்பர் 2௦25
ஓசூர் பெருமாள் கோவிலில் விஷ்ணு கார்த்திகை சிறப்பு பூஜைகள்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஓசூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று விஷ்ணு கார்த்திகை முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. மேலும் பெருமாள் புஷ்ப சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.பா. சீனிவாசன், வந்தவாசி.
www.anandabhaskar.com