வேலூர், நவ. 29- வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வள்ளிமலை ரோட்டில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை நடை திறக்கப்பட்டு ஸ்ரீவரசித்தி விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து தீப, தூப ஆராதனைகள் நிறைவு பெற்று பக்தர்கள் ஸ்ரீ வரசித்தி விநாயகரை வழிபட்டனர். ஸ்ரீ வர சித்தி விநாயகர் வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜெயக்குமார் குருக்கள் செய்திருந்தார்.